ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் ‘சிக்கந்தர்’. இப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம் வெளிவந்தது. ஒரு ‘அவுட்டேட்டட்’ படம் என்பதுதான் பெரும்பாலோனார் கருத்தாக இருந்தது.இருந்தாலும் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் மோசமில்லாத அளவிற்கு ரூ.54.72 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளன. இந்தியளவில் ரூ.35.47 கோடி, உலகளவில் ரூ.19.25 கோடி வசூலித்துள்ளது.
