சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார்.

மேலும், படம் வெற்றி பெற்றதால் அவருக்கு ராசியான நடிகை என்ற பெயரும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் அதர்வாவுடன் இதயம் முரளி என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், கயாடு லோஹர் என்பர் பெயரில் சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற இணைய தளங்களில் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதைக் கவனித்த கயாடு லோஹர், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்காக எச்சரிக்கை அளிக்கும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “சமூக ஊடகங்களில் என் பெயரில் இந்த எக்ஸ் கணக்கு தவிர வேறு எந்த கணக்கும் இல்லை. மற்றவை அனைத்தும் போலியானது, அதில் வெளியாகும் எந்த தகவலையும் நீங்கள் நம்ப வேண்டாம். நான் இந்த அதிகாரப்பூர்வ கணக்கின் மூலமாகவே உண்மையான தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.