இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான பாவனா, அதன் பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது ‘தி டோர்’ என்ற புதிய தமிழ்த் திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, பாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசையமைப்பாளர் வருண் உன்னி ஆவார்.படக்குழு தற்போது டீசரை வெளியிட்டுள்ளது. ‘தி டோர்’ திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் உருவாகி இருக்கிறது. இப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.