விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக்பாஸ் 6” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த இவர், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்கள் திரைத்துறையில் முக்கியமான வாய்ப்புகளைப் பெற்றுவரும் நிலையில், ஜனனிக்கும் அதுபோன்ற “ஜாக்பாட்” தான் கிடைத்துள்ளது. விஜய்யுடன் “லியோ” படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனது முதல் படமே விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவானதால், அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், மிகச்சிறப்பாக நடித்தார். விஜய்யுடன் இணைந்து நடித்த போது, தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
Video Link: https://www.instagram.com/reel/DGDNVCbyGM-/?igsh=ZTVmcmJjMnVheTFy
இந்தநிலையில், “காதலர் தினத்தன்று தன்னந்தனியாக ஓட்டலுக்கு சென்று விரும்பிய உணவை உண்டு மகிழ்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கிளான நீங்கள் எப்போது மிங்கிள் ஆக போகிறீர்கள் என்று கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.