ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன், குரு சோமசுந்தரம், சான்வே மேக்னா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158158-1024x683.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158159-1024x683.jpg)
இப்படத்தின் நாயகனான மணிகண்டன், நடிகர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர். அவரது பல பேட்டிகளில் கமல்ஹாசனைப் பற்றிப் பாராட்டிப் பேசாமல் இருக்க மாட்டார். அவர் நடிப்பில் வெளிவந்த ‘குடும்பஸ்தன்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினரை அழைத்துக் கொண்டு நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158163-1024x683.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158162-1024x683.jpg)
2023ல் ‘குட்நைட்’, 2024ல் ‘லவ்வர்’, 2025ல் ‘குடும்பஸ்தன்’ என ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார் மணிகண்டன்.