தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் நடிகராக அறியப்படுபவர் நடிகர் ரவிதேஜா. தொடர்ந்து போலீஸ் மற்றும் தாதா கதைகள் என ஆக்சன் ரூட்டில் பயணித்து வருபவர். அதே சமயம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவர் முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட ‘நா ஆட்டோகிராப்’ என்கிற படத்தில் நடித்திருந்தார். தமிழில் சேரன் இயக்கி நடித்து சூப்பர் ஹிட்டான ‘ஆட்டோகிராப்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இது. தெலுங்கிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றாலும் ரவி தேஜாவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை தரவில்லை.அதே சமயம் படம் வெளியாகி 20 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது வரும் காதலர் தின கொண்டாட்டமாக, அதே சமயம் ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 22ம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158008-822x1024.jpg)