Tuesday, February 11, 2025

எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக்கூடாது என முடிவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டேன் – நடிகை யாமி கவுதம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தியில் ‛ஆர்டிகிள் 370′ படத்தில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். அடுத்ததாக ‛தூம் தாம்’ எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் யாமி கவுதமுக்கு ஜோடியாக நடிகர் பிரதீக் காந்தி நடிக்கிறார். படம் பற்றி யாமி கவுதம் அளித்த பேட்டியில், ‛‛தூம் தாம் ஒரு சூழ்நிலை சார்ந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில் எனது கதாபாத்திரத்தின் பெயர் கோயல். வீர் (பிரதீக் காந்தி) என்ற பையனுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின்போது அன்று இரவில் அவர்களுக்கு சில சம்பவங்கள் நடக்கின்றன. அது பிரச்னையாக மாறும். இந்தப் பிரச்னைகளில் இருந்து கோயலும் வீரும் எப்படி வெளிவருகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக காட்டியுள்ளோம்.

பிரதீக் உடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியில் நடிப்பதற்கு எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பிரதீக் தான் காட்சியை விளக்கியதுடன் அதில் நடிக்க நிறைய உதவினார். நான் சில படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். எந்தப் படங்களில் நடிக்க வேண்டும், எந்தப் படங்களில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்யும் நிலைக்கு இப்போது வந்துவிட்டேன். ஒரு காலத்தில் எனக்கு வேலை அதிகம் இல்லாததால் என்ன படம் கிடைத்தாலும் நடித்து வந்தேன். ஆனால் இப்போது மிகவும் கவனமாக யோசித்துதான் படங்களில் கையெழுத்திடுவேன்.

எனது கணவர் ஆதித்யா, மிகவும் கடின உழைப்பாளி மற்றும் திறமையான நபர். நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்து வருகிறோம், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் வேலையைப் புரிந்துகொண்டு நிறைய ஆதரவளிக்கிறோம். நான் அவருடன் ‛உரி’ படத்தை இயக்கியிருந்தேன், அப்போது எங்கள் உறவு ஒரு நடிகரும் இயக்குனருமாக மட்டுமே இருந்தது. ஆதித்யாவின் சிறப்பு என்னவென்றால், எந்த நடிகரிடம் இருந்தும் எப்படி நடிப்பை வரவழைப்பது என்பது அவருக்கு தெரியும்” எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News