1960, 70களில் வெற்றிகரமாக நடந்த நாடகங்களை திரைப்படமாக மாற்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த ‘யுனைடெட் அமெச்சசூர்’ நாடகக் குழுவின் பல நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157407.png)
இக்குழுவின் ‘கண்ணன் வந்தான்’ நாடகம் சிவாஜியின் நடிப்பில் உருவான ‘கௌரவம்’ திரைப்படமாக வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், ‘மேஜர் சந்திரகாந்த், தங்கபதக்கம், வியட்நாம் வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு’ போன்ற பல நாடகங்கள் திரைப்படமாக மாறி ரசிகர்களால் பரவலாக வரவேற்கப்பட்டன.இந்த வரிசையில், தற்போது ஒய்.ஜி. மகேந்திரன் நடித்து வரும் ‘சாருகேஷி’ நாடகம் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் எண்ணத்தை முதலில் பார்த்த ரஜினிகாந்த், இதனை ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார், இதன் பின்னணியில் படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நாடகத்தில் சாருகேஷி கதாபாத்திரத்தில் நடித்த ஒய்.ஜி. மகேந்திரன், படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பேரன் ரித்விக் இளமைக்கு சம்பந்தப்பட்ட சாருகேஷியாக நடிக்கிறார். மேலும், சுஹாசினி, சமுத்திரக்கனி, சத்யராஜ், தலைவாசல் விஜய், ஜெயபிரகாஷ், மதுவந்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘பாட்ஷா, அண்ணாமலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்க, இசையமைப்பாளராக தேவா பணியாற்றுகிறார்.’சாருகேஷி’ என்பது ஒரு ராகத்தின் பெயர். சாருகேஷியின் இசையை கேட்டால் யாரும் மயங்காமல் இருக்க முடியாது. அவர் மேடையில் பாடும்போது, பார்வையாளர்கள் தாளம் தவிர்த்து கைதட்டுவதையே மறந்து விடுவர். அவர் ஆலாபனை செய்யாத ராகங்கள் கிடையாது.இவ்வாறு இசை உலகை கட்டிப்போட்ட இந்த மனிதர், அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என யாரையும் நினைவில் வைத்திருக்க முடியாது. நானே யார்? என்ற கேள்விக்கும் விடையில்லாமல் முழுவதுமாக நினைவிழந்து விடுவார். இந்த நினைவிழப்பு சாருகேஷியின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பதே இந்த படத்தின் முக்கியக் கதை.