தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நான்கு ஆண்டுகளுக்குள் கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்.தெலுங்கு நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. இதன் பின்னர், சமந்தா மீண்டும் எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஒரு பிரபல இயக்குனரை அவர் காதலித்து வருகிறார்களாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155431-819x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155432-819x1024.jpg)
இந்நிலையில், சமந்தா அளித்த ஒரு பேட்டியில், நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து கேட்டபோது, “என் வாழ்க்கையில் பல விஷயங்களை கடந்து வந்துள்ளேன். அதேபோல் திருமண உறவிலிருந்தும் முன்னேறி விட்டேன். சில விஷயங்களில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன், அதனால் தான் தற்போது தெளிவாக இருக்கிறேன். நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து எனக்கு எந்த பொறாமையோ, வெறுப்போ இல்லை” என்று கூறினார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154899-784x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154897-562x1024.jpg)
மேலும், சமூகத்தில் பெண்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யவேண்டும் என்பதே பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், நான் அதை அப்படியாக பார்க்கவில்லை. தனிமையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலும் தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் வாழ முடியும் என்பது தான் என் கருத்து” என்று தெரிவித்தார்.