நானி, மிருணாள் தாக்கூர் மற்றும் பலர் நடிக்க சவுரிவ் இயக்கத்தில் 2023ல் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஹை நன்னா’. அப்படத்தைத் தங்களது ‘பீமசேனா நளமகாராஜா’ படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர மல்லிகார்ஜுனய்யா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் அவர் குற்றச்சாட்டை வைத்திருந்தாலும் இந்த காப்பி விவகாரம், தெலுங்கு, கன்னடத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் ‘ஹை நன்னா’ குழுவினரை ‘டேக்’ செய்து பதிவிட்டிருந்தாலும் அதற்கு யாரும் எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more