விஷால் நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம், கடந்த 2013-ம் ஆண்டு உருவானது. ஆனால், பல காரணங்களால் படம் வெளிவராமல் இருந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜனவரி 12-ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படம் வெளியானதும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, 50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து, பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால், விஷால் – சுந்தர்.சி கூட்டணி மீண்டும் இணைகிறதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில், சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த விஷால், மீண்டும் சுந்தர்.சி உடன் இணைவது குறித்து ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, அவர் “கூடிய சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என்று உறுதியாக பதிலளித்துள்ளார்.முந்தைய காலத்தில், விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் வெளியான ‘மதகஜராஜா’, ‘ஆம்பள’, ‘ஆக்சன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.