Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கோடைக்கு ரிலீஸ் ஆகிறதா துருவ நட்சத்திரம்? கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் 2017ஆம் ஆண்டில் வெளியானதாக அறிவிப்புகள் வந்தன. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. பின்னர், சில முறை படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்புகள் வந்தன, ஆனால் படம் வெளியிடப்படவில்லை. கடைசியாக, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அது வெளியிடப்படவில்லை.

இதனிடையே, ‘மத கஜ ராஜா’ படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியிடப்பட்டு, 50 கோடியுக்கும் மேலான வசூலைப் பெற்றது. அதனுடன், ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட பல படங்களை வெளியிட திரையுலகினர் முயற்சி செய்து வருகின்றனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடுவதாக இயக்குனர் கவுதம் மேனன் கூறினார். ‘மத கஜ ராஜா’ படம் தான் அந்த முடிவுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News