12 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் சுந்தர். சி ஒரு தரமான பட்ஜெட்டில் நல்ல பிரம்மாண்ட படமாகவே மத கஜ ராஜா படத்தை எடுத்திருக்கிறார். 16 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியான மத கஜ ராஜா திரைப்படம் முதல் நாளிலேயே 3 கோடி ரூபாய் வசூலுடன் நல்ல ஓபனிங் கொடுத்த நிலையில், திங்கட்கிழமை 3.5 கோடி வசூல் செய்தது. பொங்கல் பண்டிகையன்று 6.2 கோடி ரூபாய் வசூல் செய்த மத கஜ ராஜா மாட்டுப் பொங்கலுக்கும் 6.8 கோடி ரூபாய் வரை வசூல் செய்து ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டையை நான்கு நாட்களில் நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more