பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் மிகப்பெரிய வெற்றியால், அந்த படத்தின் பெயர் அவருடன் அடையாளமாகவே நிலைத்து விட்டது.
தொடர்ந்து, ‘விசாரணை’, ‘குக்கூ’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘திருடன் போலீஸ்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் தினேஷ், சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் முரளி கிருஷ் இயக்கத்தில் உருவாகும் ‘கருப்பு பல்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இன்று உழவர் திருநாள் கொண்டாடப்படும் நாளில், ‘கருப்பு பல்சர்’ படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.