தமிழ் திரைப்படங்களில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷி கன்னா. தற்போது அவர் ஜீவா உடன் அகத்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தென்னிந்திய ரசிகர்களைப் பற்றிய அவரது கருத்துக்கள் பெரிதாக தற்போது வைரலாகி வருகிறது. அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் ரசிகர்கள் குறித்து அவரது கருத்தை கூறியுள்ளார்.
அதாவது, தென்னிந்திய ரசிகர்கள் ஒரு திரைப்பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுகிறார்கள். அவர்கள் உணவைக் கூட மறந்துவிடலாம், பட்டினியால் வாடலாம், ஆனால் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள், மேலும் தென்னிந்திய ரசிகர்கள் நடிகர்களையும் சினிமாவையும் அதிகளவு நேசிக்கிறார்கள் என்றுள்ளார் ராஷி கன்னா.