பாலிவுட்டில் நெப்போடிசம் சர்ச்சையில் அதிகம் பாதிக்கப்பட்டாலும் அதை எல்லாம் தாண்டி நடிகை ஆலியா பட் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். 86.2 மில்லியன் ரசிகர்கள் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.
சினிமாவில் பாலிவுட் நடிகைகள் அதிகம் கவர்ச்சியையும் கொஞ்சம் நடிப்பையும் காட்டி வரும் நிலையில், கொஞ்சம் கிளாமரையும் அதிக நடிப்பையும் கொட்டி டாப் ஹீரோயினாக மாறியுள்ளார். கங்குபாய் கத்தியாவடி, ஆர்ஆர்ஆர் படங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு ஜாலி டூர் சென்றுள்ள நடிகை ஆலியா பட் அங்கே கடலில் குளிக்கும் போது மோனோகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தையும் ஸ்பீட் போட்டில் பயணிக்கும் காட்சிகளையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.