ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. அதன்பிறகு, அவர் பதி பத்னி அவுர் வோ போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். மேலும், காலி பீலி, கெஹ்ரையான், லைகர், ட்ரீம் கேர்ள்-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
கடந்த ஆண்டு தனது முதல் வெப் தொடரான கால் மீ பேவில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, சிடிஆர்எல் என்ற படத்திலும் நடித்தார். இந்த இரு படங்களிலும் அவரின் நடிப்புக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில், கால் மீ பே மற்றும் சிடிஆர்எல் படங்களில் நடித்த போது மிகவும் பதட்டமாக இருந்ததாக அனன்யா பாண்டே மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கால் மீ பே மற்றும் சிடிஆர்எல் படங்களில் நடிக்கும்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். மக்கள் என்னைப் பிடிக்குமா? அல்லது என்னைப் பார்த்து சலிக்கப்போறார்களோ? என்றெல்லாம் மனதில் பல சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இந்த இரு படங்களுக்குமான பாராட்டுகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன” என அவர் தெரிவித்துள்ளார்.