கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘படையப்பா’. இந்த திரைப்படம் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்தது.
ரஜினியின் வசூல் சாதனை படங்களில் ‘பாட்ஷா’வுக்கு அடுத்த இடத்தை ‘படையப்பா’ தனது வெளியீட்டின் போது பிடித்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை கொண்டாடும் வகையில், ‘படையப்பா’ திரைப்படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில அரசு விருதை பெற்ற இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார், இது இன்னும் நினைவிலிருக்கும் அற்புதமான பாடல்களைக் கொண்டுள்ளது.