கடந்த ஆண்டு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.அதேபோல், இயக்குநர் ஜித்து மாதவன், ஃபகத் ஃபாசிலை வைத்து இயக்கிய ‘ஆவேஷம்’ திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது ஜித்து மாதவன் எழுதிய கதையை சிதம்பரம் இயக்க இருக்கிறார்.
‘ஆவேஷம்’ வெற்றிக்குப் பின், ஜித்து மாதவன் மோகன் லாலை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. வெங்கட் கே. நாராயணனின் கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் விஜய் நடிக்கும் 69-வது படம், கன்னடத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’, மலையாளத்தில் சிதம்பரம் இயக்கும் படம் ஆகியவை கே.வி.என் நிறுவனத்தின் பெரிய திட்டங்களாக உள்ளன.
இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். கடந்த ஆண்டில் சிறிது இடைவெளி எடுத்த அவர், இத்திரைப்படத்தின் மூலம் திரும்பவிருக்கிறார்.