கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘தேவரா பாகம்-1”. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.ஜூனியர் என்டிஆரின் 30-வது படமும், ஜான்வி கபூரின் முதல் தெலுங்கு படமுமான ‘தேவரா பாகம்-1’ கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.172 கோடி வசூல் செய்தது.இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி துவங்குகிறது.
