நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷி கன்னா. தொடக்கத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த அவர், தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறுகிய காலத்திலேயே அவருடைய நடிப்பு மற்றும் அழகால் தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் திரையுலகில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான ராஷி கன்னா, அந்த படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது அவர் இணையத்தில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.