Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருக்கிறோம்… தனுஷ் – ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருபது ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இவர்களுக்குள், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பரஸ்பர ஒப்புதலோடு சட்டபூர்வ விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விவாகரத்து வழக்கு தற்போது முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்ததால், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், இதற்கு முன்னதாக இரண்டு முறை வழக்கு வந்தபோதும், இருவரும் ஆஜராகவில்லை. இதனால், மீண்டும் சேர்ந்து வாழ்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்ற தகவல் வெளியானது.

ஆனால் இன்று (நவம்பர் 21) மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேரில் ஆஜராகினர். நீதிமன்றத்தில் இருவரும் சேர்ந்து வாழும் விருப்பம் இல்லை என்றும், பிரிவுதான் சரியான முடிவு என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் நவம்பர் 27 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறி, வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News