Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2 ட்ரெய்லர் படைத்த பிரம்மாண்ட சாதனை… நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு! #Pushpa 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், புஷ்பா தொடரின் இரண்டாவது பாகமாக பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அல்லு அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள் வெளியானவுடன் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து டிரெய்லர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதுவரை, யூடியூப் தளத்தில் புஷ்பா 2 டிரெய்லர் 120 மில்லியன் பார்வைகளைத் தாண்டி சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்தியில் 64 மில்லியன் பார்வைகளும், தெலுங்கில் 54 மில்லியன் பார்வைகளும், தமிழில் 6.4 மில்லியன் பார்வைகளும் மற்ற மொழிகளிலும் நல்ல வியூவ்ஸ்-ஐ பெற்றுள்ளது.

TEAM PUSHPA 2

மேலும், டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் 102 மில்லியன் பார்வைகளைத் தாண்டி, இந்தியாவில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற மூன்றாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை 113.2 மில்லியன் பார்வைகளுடன் சலார் திரைப்பட டிரெய்லர் முதல் இடத்திலும், 106.5 மில்லியன் பார்வைகளுடன் கே.ஜி.எப் 2 டிரெய்லர் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

- Advertisement -

Read more

Local News