Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘கங்குவா’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… விமர்சனங்களை கவனிக்காதீர்கள் – நடிகர் சூரி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“கங்குவா” திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஒரு சாதாரண ரசிகனாக குடும்பத்துடன் சென்று அந்த படத்தை பார்த்தேன். சிலர் சொல்லும் எதிர்மறை கருத்துகளை பார்க்க வேண்டாம். அதற்கு பதிலாக, அதிகமான மக்கள் கூறும் நல்ல கருத்துகளை கவனிக்க வேண்டும். “கங்குவா” திரைப்படம் தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளது. அந்த எண்ணத்திற்கு நான் மரியாதையாக தலை வணங்குகிறேன். இந்த திரைப்படத்தில் பலர் பெரும் உழைப்புடன் ஈடுபட்டுள்ளனர். படத்தை உருவாக்க பல கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.

மேலும், அவர் கூறியதாவது, சிலர் எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே செய்து, அதன்மூலம் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்கள் காமிரா முன்பு போய் அவ்வாறு விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். சிறந்த படைப்புகளைப் பாராட்டும் மனதுடன் இருக்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News