Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புதுமையான அனுபவங்கள் நிறைந்த படம் இது…நிறங்கள் மூன்று திரைப்படம் குறித்து பகிர்ந்த நடிகர் அதர்வா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறங்கள் மூன்று . சில பிரச்சனைகளால் இந்த படம் வெளியீட்டில் தாமதமாகி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அதர்வா, “இந்த படத்தைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் எல்லாம் பேசலாமா என்பது தெரியவில்லை. கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படத்தை பார்த்ததிலிருந்து அவருடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்தது. அவர் ஒரு சுவாரஸ்யமான இயக்குநர் என்பதற்கேற்ப, அவரின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தனித்துவமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை படிக்கும்போதே எனக்கு கொஞ்சம் பயம் ஏற்பட்டது. நான் நிதர்சனத்தில் எப்படி இருக்கிறேனோ, அதற்கு நேரெதிரான ஒரு கதாபாத்திரத்தை இப்படத்தில் ஏற்றிருக்கிறேன். அந்த பயத்தையும் கடந்து, கார்த்திக் நரேனின் மீது வைத்த நம்பிக்கையால் இந்த படத்துக்கு ஓகே சொன்னேன். இந்தப் படம் ரொம்ப வித்தியாசமானது. எந்த வகை ஜானருக்கும் அடக்கிவைக்க முடியாத ஒன்று.

இப்படத்தில் சரத்குமாருடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளேன். அதுவும் ஒரே ஒரு நாள்தான் அவருடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்தேன். நடிகர் ரஹ்மான் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் பூமாதேவியின் முதுகில் பாரத்தை ஏற்றும் முறையில், கார்த்திக் நரேனின் மீது முழு நம்பிக்கையுடன் நடித்துள்ளேன்.ஒரு சண்டைக்காட்சியில் முழுமையாக நடித்தேன், ஆனால் எடிட்டிங் முடிந்தபிறகு பார்த்தால், அது முழுவதும் ரிவர்ஸாக இருந்தது. இப்படியொரு புதுமையான அனுபவங்கள் நிறைந்த படம் இது. உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல படத்தை வழங்கியிருக்கிறோம் என்று நம்புகிறேன் என நடிகர் அதர்வா கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News