Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஆர்.ஆர்‌‌.ஆர் படத்தில் 15 நிமிடங்கள் நடித்தேன் ஆனால் எடிட்டில் தூக்கி விட்டார்கள்… நடிகர் சத்யதேவ் ஆதங்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பொதுவாகவே ராஜமவுலியின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட மிகப்பெரிய அளவில் வெளிச்சம் பெறுவார்கள். அவரது படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என்று பல நடிகர்கள் ஏங்குவதுண்டு.

ஆனால் ஆர்ஆர்ஆர் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரும் விதமாக நடித்தும் கூட படம் வெளியானபோது தான் நடித்த ஒரு நிமிட காட்சி கூட இடம் பெறாமல் அப்படியே வெட்டி தூக்கப்பட்டு விட்டன என்றும், அதனால் நான் அந்த படத்தில் நடித்தது வெளியே தெரியாமலேயே போய் விட்டது என்றும் ஒரு புதிய தகவலை தற்போது கூறியுள்ளார் தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் சத்யதேவ்.

2011-ல் பிரபாஸ் நடித்த பெர்பெக்ட் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த சத்யதேவ் மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்கவில்லை என்றாலும் இத்தனை வருடங்களாக ஏதோ தாக்குப்பிடித்து நகர்ந்து வருகிறார். அடுத்ததாக இவரது ஜீப்ரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பேட்டி ஒன்றில் ஆர்ஆர்ஆர் படத்தில் தான் நடித்தது குறித்து கூறியுள்ளார் சத்யதேவ்.

முதலில் இருந்த கதைப்படி தனது கதாபாத்திரம் தேவைப்பட்டதாகவும் அதற்காக 15 நிமிட காட்சிகள் வரும் விதமாக, பல நாள் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ள சத்யதேவ் அடுத்தடுத்து கதையின் போக்கில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக தனது கதாபாத்திரத்திற்கான தேவையே இல்லாமல் போய்விட்டதால் படத்தில் இருந்து அதை நீக்கி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். படத்தில் தான் இடம் பெறாமல் போனதை பார்த்துவிட்டு அதன் பிறகு இந்த படத்தில் நான் நடித்தேன் என்பதை இப்போது வரை வெளியே சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News