தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர், அவர் கதாநாயகனாக நடித்த ‘லவ் டுடே’ படத்தையும் இயக்கினார், இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கிரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இது மட்டுமன்றி, பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ் பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்தார். இந்நிலையில் ‘டிராகன்’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.