Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

ரீ ரிலிஸில் 1000 நாட்களை கடந்து சாதனை படைத்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவுதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியானது. இதில் சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஒரு புதிய கலாச்சாரம் வந்தது, அதுதான் ரீ-ரிலீஸ். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலர் தினத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ரீ-ரிலீஸாக திரையிடப்பட்டது.

சென்னையில் உள்ள வி.ஆர். மால் பிவிஆர் திரையரங்கில் இது ஆயிரம் நாட்களை கடந்துள்ளது. ஒரு ரீ-ரிலீஸ் திரைப்படம் இத்தனை நாட்கள் ஓடியது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இதுவரை தொடர்ந்து வந்து படம் பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக வசூல் காட்சிகளும் நடந்துள்ளது.

சிம்பு, திரிஷாவின் காதல் நடிப்பும், ஏ.ஆர். ரஹ்மானின் இனிமையான இசையும் இந்த வெற்றிக்கான காரணமாக உள்ளன. தமிழ் சினிமாவில், ரீ-ரிலீஸில் ஆயிரம் நாட்களை கடந்த படம் என்பது மிகச் சிறப்பான சாதனையாக கருதப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News