Friday, October 18, 2024

சினிமாவில் இருந்து சிறிது ஓய்வெடுக்க போகும் மலையாள சினிமாவின் அனிருத்… சுசின் ஷியாம்-ன் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள சுசின் ஷியாம், கடந்த ஏழு ஆண்டுகளாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் முதன்முதலில் “கிஸ்மத்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மம்முட்டி நடிப்பில் “தி கிரேட் பாதர்” மற்றும் மோகன்லால் நடிப்பில் “வில்லன்” ஆகிய படங்களின் பின்னணி இசையமைப்பாளர் ஆகி புகழடைந்தார். தொடர்ந்து பஹத் பாசில் நடித்த “வரதன்,” “கும்பலாங்கி நைட்ஸ்,” “ட்ரான்ஸ்,” “மாலிக்” போன்ற படங்களுக்கும் சமீபத்தில் வெளிவந்த “ஆவேசம்” வரை பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

அதோடு, கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான மிகப்பெரிய வெற்றி படம் “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற “மஞ்சும்மேல் பாய்ஸ்” ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார். சமீபத்தில் இவர் “ஆவேசம்” மற்றும் “மஞ்சும்மேல் பாய்ஸ்” படங்களின் இசைகளை கிராமி விருது தேர்வுக்காக அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, அவர், “இன்னும் சில மாதங்களுக்கு நான் ஓய்வெடுக்கிறேன். எந்த புதிய படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒரு வகையில் நான் ரிலாக்ஸ் ஆகி என்னையே புதுப்பித்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகும்” என்று கூறியுள்ளார்

- Advertisement -

Read more

Local News