Monday, October 14, 2024

தனுஷின் இட்லி கடை படத்தில் இணைந்தாரா அருண் விஜய்? வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி! #IdlyKadai

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ எனும் புதிய படத்தை இயக்கி, அதில் நடித்துவருகிறார். ‘டாவுன் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’, ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய நிறுவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையை ஜி.வி. பிரகாஷ் அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக, இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து, ‘இட்லி கடை’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு, இந்த படத்தில் நித்யா மேனன் தனுஷுடன் கதாநாயகியாக நடித்துவந்தார் என்று தகவல்கள் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷுடன் டீ க்ளாஸ் உடன் நித்யா மேனன் புகைப்படம் வெளியிட்டு, ‘புதிய அறிவிப்பு’ என கூறியுள்ளார். நடிகர் அருண் விஜய்யும் இப்படத்தில் நடித்து வருவதாகவும், 2ம் கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘Excited on the new journey’ என குறிப்பிட்டு, தனுஷின் ‘ராயன்’ படத்தில் இடம்பெற்ற பாடலுடன் ஸ்டோரி வெளியிட்டுள்ளார்

- Advertisement -

Read more

Local News