நடிகர் அஜித்குமாரின் ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம், அந்தமானில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

மோட்டார்சைக்கிள் மற்றும் மோட்டார்ச்போர்ட்ஸ் ஆர்வலராக இருக்கும் அஜித்குமார், இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். கடந்த ஆண்டு அவர் நிறுவிய ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்து, இதனால் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. ‘ஐலேண்ட் ரம்பிள்’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வில் ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது மக்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற நாடுகளில், சிலிர்ப்பான பயணங்களையும் அஜித்தின் ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு பயணமும் மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. பயணங்களில் இயற்கைக்காட்சிகளையும், பார்வையிடாத இடங்களையும் கண்டறிந்து சிறந்த அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மோட்டார்சைக்கிள் பயணங்களுக்கு கூடுதலாக கார் மற்றும் சைக்கிள் பயணங்களையும் ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம் வழங்குகிறது, இது ஒவ்வொரு பயணியருக்கும் சாகச அனுபவத்தை உறுதியாக வழங்குகிறது.அந்தமானில் நடைபெற்ற ‘ஐலேண்ட் ரம்பிள்’ ஹார்லி-டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின் ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனம் சாதனை படைத்தது.