Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கடைசி நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்த பிரபலங்கள்… யார் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 வரும் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. ‘ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ என்ற வாசகத்துடன் விஜய் சேதுபதி தனது முதல் சீசனை தொகுத்து வழங்க இருப்பதால் இந்நிகழ்ச்சின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மேக்கீங் வீடியோ சமீபத்தில் வெளியானது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வுள்ள போட்டியாளர்களின் பட்டியல் கிட்டத்தட்ட உறுதியாகி போட்டியாளர்களும் தயாராகி விட்டார்களாம்.

இந்நிலையில் போட்டியாளர்கள் பட்டியலில் கடைசி நேரத்தில் சிலர் இணைந்துள்ளார்களாம். அவர்கள் யாரென்று பார்த்தால் காத்து மேல மற்றும் மக்காமிஷி பாடல் புகழ் பால் டப்பா எனும் அனிஷ்‌, தர்பார் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களிலும் வேற மாதிரி ஆபிஸ் வெப்சிரீஸ்-ல் நடித்த சௌந்தர்யா நஞ்சுண்டன், மானாட மயிலாட டான்ஸர் கோகுல்நாத், பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து விலகிய வி.ஜே.விஷால் மற்றும் பிரபல முண்ணனி நடிகை ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கடைசி நேரத்தில் பிக்பாஸ்-ல் இணைந்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News