சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடித்த ‘புஷ்பா’ படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணியுடன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் ‘புஷ்பா 2’ உருவாக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருக்குள் கருத்து மோதல் ஏற்பட்டது, அதனால் இப்படத்தின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், இச்செய்தி பொய்யாகும். சமீபத்தில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘புஷ்பா’ முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா’ பாடல் உலக அளவில் வைரலானது. இதேபோல, ‘புஷ்பா 2’ படத்திலும் ஒரு சிறப்பு பாடல் உள்ளது. ஆரம்பத்தில், இந்த பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக ஸ்ரீலீலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போதைய தகவலின் படி, ‘அனிமல்’ படத்தின் மூலம் பிரபலமான த்ரிப்தி டிம்ரியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவருடைய சம்பள கோரிக்கை அதிகமாக இருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை என கூறப்படுகிறது. இப்படம் வரவிருக்கும் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால், படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.