Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பயமுறுத்த வைக்கும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ப்ளாக் பட ட்ரெய்லர் வெளியானது! #BLACK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ், அடுத்ததாக ஜீவா நடித்துள்ள “பிளாக்” திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களே பிரதானமாக அமைந்துள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்கான வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News