Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் தனுஷ் பட வில்லன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது, அவர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். இதற்குபோதே, அவர் தனது தயாரிப்பில் ஒரு புதிய வெப் தொடரையும் சத்தமின்றி உருவாக்கி வருகிறார்.

இந்த தொடரை அசோக் வீரப்பன், பரத் முரளிதரன், கமலா ஆகிய மூவரும் இணைந்து இயக்கி வருகின்றனர். திரில்லர் வகை கொண்ட இந்த வெப் தொடருக்கு ‘ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடித்துள்ளார். அவர் ஏற்கனவே தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நந்தா, மனோஜ் பாரதிராஜா மற்றும் முத்துக்குமார் போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News