சமீபத்தில் பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சிலர் அவரை ராசியில்லாத நடிகை என்று கூறினர். ஆனால் அந்த மறைமுகக் குற்றச்சாட்டை, ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் வெற்றியின் மூலம் பிரியா பவானி சங்கர் முடித்து வைத்தார். நீண்ட நாட்களுக்கு பின் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனை உணர்ந்த அவர் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அவர் அடுத்ததாக ஜீவாவுடன் ‘ப்ளாக்’ படத்தில் நடித்துள்ளார்.
ப்ரியா பவானி சங்கர் கல்லூரி படிக்கும் காலத்தில் காதலிக்கத் தொடங்கியவர். அவர் காதலிக்கிறவர் ராஜவேலு, வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், தனது தாய்க்கு தன்னைவிட ராஜவேலுவை மிகவும் பிடிக்கும் என்றும், பிரியா பவானி சங்கர் சில பேட்டிகளில் கூறியுள்ளார்.
மேலும், ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, கிளாமராக நடித்தால் மட்டும் பெரிய ஹீரோயினாக ஆகமுடியாது. அது சினிமாவில் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும். கிளாமர் ரோலில் நடிப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என்று நான் நினைக்கிறேன். இப்போது நடிப்பதுதான் எனக்கு வசதியாக உள்ளது. ரசிகர்களுக்கும் என்னை கிளாமராக பார்க்க பிடிக்காது என்று நினைக்கிறேன். எனது வழக்கமான நடிப்பை அவர்களுக்கு விருப்பம் இருக்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.