Tuesday, November 19, 2024

அந்தகன் திரைப்படத்தை முதலில் இயக்கவிருந்த இயக்குனர் மோகன் ராஜா… சுவாரஸ்யமான தகவலை சொன்ன இயக்குனர் தியாகராஜன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘அந்தகன்’. இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று படக்குழு சார்பில் ஒரு வெற்றிக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தியாகராஜன், “முதலில் இந்தத் திரைப்படத்தை ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக இருந்தார். அவருடன் மூன்று மாதங்கள் பணியாற்றினோம். அந்த மூன்று மாதங்களில், அவர் லண்டனில் இருக்கும் ஒரு வெளிநாட்டு நடிகையை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தை வழங்குவதற்கு நாம் ஒப்புக்கொண்டோம். மூன்று மாதங்கள் கழித்து, மோகன்ராஜாவுக்கு சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, சிரஞ்சீவி உடனான படத்தை இயக்கி முடித்த பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன் என்று மோகன்ராஜா தெரிவித்தார். நான் அவருக்கு நன்றி கூறி, “உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள்” என்றேன். அதன் பிறகு, இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, சிம்ரனைத் தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவர் நடிக்க ஒப்புக்கொண்டு, படத்திற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்தார்,” என்றார்.

‘அந்தகன்’ படத்தை இயக்குவதை விட்டுவிட்டு, மோகன்ராஜா தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த ‘காட்பாதர்’ படத்தை இயக்கச் சென்றார். ஆனால், அந்தப் படம் தெலுங்கில் தோல்வியடைந்தது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக இருந்தது ‘காட்பாதர்’. அந்தப் படத்திற்குப் பிறகு, மோகன்ராஜா இயக்கத்தில் இன்னும் எந்தப் படமும் வெளிவரவில்லை. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் ‘தனி ஒருவன் 2’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது மோகன்ராஜா செய்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News