தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. அவருக்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் அறிமுகமான அவர், தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
நாகசைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது, நடிகை சமந்தா “சிட்டாடல்” என்ற தொடரில் நடித்துள்ளார். இதை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, நடிகை சமந்தா, சிட்டாடல் தொடர் இயக்குனர் ராஜை காதலிப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவியிருந்தன. இந்த நிலையில், சமந்தா தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அந்த வதந்திக்கு பதிலளித்துள்ளார். அந்த புகைப்படத்தில் “அமைதியின் அருங்காட்சியகம்” என்று எழுதியுள்ள ஆடையை அணிந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், இது நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்திற்கு தொடர்புடைய பதிவு என்றும், சிலர், இயக்குனரை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு பதிலளிக்கின்ற பதிவு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில், நாகசைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.