Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து விலகிய கமல்ஹாசன்… வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பங்களிப்பே காரணம். உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News