இந்தியத் திரையுலகத்தில் பிலிம்பேர் விருதுகள் மிக நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் விருதுகளாக உள்ளன. தென்னிந்தியத் திரையுலகத்திற்கான 69வது பிலிம்பேர் விருதுகள் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றன. அதில் தமிழ் சினிமாவிற்கான விருதுகளை வென்ற வெற்றியாளர்கள் பட்டியல் கீழே!
சிறந்த திரைப்படம்: சித்தா
சிறந்த இயக்குனர்: எஸ்யு அருண்குமார் – சித்தா
சிறந்த படம் (விமர்சகர்கள் விருது): விடுதலை – பார்ட்1
சிறந்த நடிகர்: விக்ரம் – பொன்னியின் செல்வன் 2
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் விருது): சித்தார்த் – சித்தா
சிறந்த நடிகை: நிமிஷா சஜயன் – சித்தா
சிறந்த நடிகையர் (விமர்சகர்கள் விருது): ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா), அபர்ணா தாஸ் (டாடா)
சிறந்த துணை நடிகர்: பஹத் பாசில் – மாமன்னன்
சிறந்த துணை நடிகை: அஞ்சலி நாயர் – சித்தா
சிறந்த இசை ஆல்பம்: திபு நினன் தாமஸ், சந்தோஷ் நாராயணன் – சித்தா
சிறந்த பாடலாசிரியர்: இளங்கோ கிருஷ்ணன் – அக நக… – பொன்னியின் செல்வன் 2
சிறந்த பின்னணிப் பாடகர்: ஹரிச்சரண் – சின்னஞ்சிறு நிலவே… – பொன்னியின் செல்வன் 2
சிறந்த பின்னணிப் பாடகி: கார்த்திகா வைத்யநாதன் – கண்கள் ஏதோ… – சித்தா
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் – பொன்னியின் செல்வன் 2
சிறந்த கலை வடிவமைப்பாளர்: தோட்டா தரணி – பொன்னியின் செல்வன் 2
வழங்கப்பட்ட விருதுகளில் சித்தா, பொன்னியின் செல்வன் 2 படங்களைக் சார்ந்த கலைஞர்களுக்குத்தான் அதிக விருதுகள் கிடைத்துள்ளன.