டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் டிடி. இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த டிடி, தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


இவர், கமல் ஹாசனின் தயாரிப்பான நள தமயந்தி படத்தில் பிராமண பெண்ணாக நடித்தார், இது தமிழ் மக்களின் விரும்பிய படமாக மாறியது. இதையடுத்து அவர், விசில் திரைப்படத்தில் வேறு விதமாக நடித்து ரசிகர்ளை கவர்ந்தார். சில திரைப்படங்களில் சில சிறிய பாத்திரங்கள் மற்றும் ரூபா சுவாமிநாதனின் ஒரு சுயாதீன ஆங்கில திரைப்படத்தில் ஒரு பாத்திரத்திற்குப் பிறகு, மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினார்.


எப்போதாவது குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இருப்பினும் இன்ஸ்டாகிராம் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் டிடி தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலைபோல் குறித்து வருகின்றனர்.