ஜில்லா’, ‘தர்பார்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது அவர் ’35’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் பாக்யராஜ், கவுதமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது, மற்றும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து, இப்படம் திரைக்கு வர இன்னும் 35 நாட்கள் இருக்கும் நிலையில், இதை குறித்த தகவலை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

அந்த பதிவில், எனது படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. அந்த படத்தை பார்க்க சின்ன குழந்தை போல் ஆர்வமாக காத்திருக்கிறேன். எனது முகத்தில் ’35’ படம் சிரிப்பை வரவைத்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இது எனது படம் என்று நான் பெருமையாக கூறுகிறேன். ஆனால் இன்னும் 35 நாட்களுக்கு பிறகு, இது உங்கள் படமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார் நிவேதா தாமஸ். ‘குட்டி ஸ்டோரி’ என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலானது.