Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

உன்னி முகுந்தனின் ‘மார்கோ’ படத்தில் இணைந்த பிரபல நடிகர் ரியாஸ் கான் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரது மாளிகப்புரம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில், தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார், இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்ததாக, உன்னி முகுந்தன் நடிப்பில் ‘மார்கோ’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹனீப் அடேனி இயக்குகிறார். சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், மேலும் கே ஜி எப், சலார் போன்ற படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சமீர் முகமது படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மூணாறு போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பிரபல நடிகர் ரியாஸ் கான் ‘மார்கோ’ படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, நடிகர் உன்னி முகுந்தன் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் ரியாஸ் கானை வரவேற்கும் விதமாக ஒரு வீடியோவை நேற்று பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ‘அடிச்சு கெரி வா’ என்ற பிரபலமான உரையாடலுடன் அவரது என்ட்ரி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப்படத்தில் கபீர் துஹான் சிங், அபிமன்யு, அன்சன் பால், சித்திக் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News