Tuesday, November 19, 2024

கையில் இளநீரோட நேஷனல் கரஷ் போட்ட ஆட்டம் வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை தங்களது கனவு கன்னியாகவே பார்த்து வருகின்றனர். கீதா கோவிந்தம் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்தார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஷ்மிகா இந்த ஆண்டு புஷ்பா 2 படத்திலும் ரசிகர்களை கவர காத்திருக்கிறார்.

தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படங்களில் நடித்த ராஷ்மிகா கடந்த ஆண்டு இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து உலக அளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார். இதைத்தொடர்ந்து தனுஷுடனும் குபேரா படத்திலும் அடுத்ததாக சல்மான் கானுடன் ஜோடி போட்டு சிக்கந்தர் படத்திலும் நடித்து வருகிறார்.

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அனிமல் படத்தில் பாபி தியோல் தலையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு நடனமாடுவார். இந்நிலையில், நடிகர் ராஷ்மிகா மந்தனா தனது தலையில் இளநீரை வைத்துக்கொண்டு நடனமாடும் ஃபன்னான வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News