Tuesday, November 19, 2024

கலைஞர் ஐயா பயோபிக் நான் நடித்தால் அது எனக்கு தான் பெருமை – நடிகர் ஜீவா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜீவா, இவர் முதல் படத்தில் அறிமுகமானதைப் போலவே இன்றும் அதே உற்சாகத்துடன் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் செய்துவருகிறார். ‘ராம்’ மற்றும் ‘கற்றது தமிழ்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னை சிறந்த நடிகராக நிரூபித்தவர். இவரின் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியடைந்த நிலையில், அடுத்து ஒரு வெற்றிப்படம் கொடுக்க காத்திருக்கிறார்.

இந்நிலையில், அவர் கலைஞரின் வரலாற்று புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில், கலைஞரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை 100க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் கொண்டிருந்தது.

இந்தக் கண்காட்சி ஜூன் 1ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். தொழிநுட்பங்களின் பயன்பாட்டுடன் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சி ஜூன் 10ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், பலரும் இக்கண்காட்சியை காண ஆர்வமாக உள்ளனர்.

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால், அதில் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்டபோது, “அதில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை. சமீபத்தில் தெலுங்கில் அதே போன்ற கேரக்டர் செய்தேன், அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர். ஆனால் கலைஞரை வரலாற்றைப் படமாக எடுப்பதை விட, வெப் சீரிஸாக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா. விஜய் இயக்குவார் என்று நினைக்கிறேன்” என்றார். “என்னை இங்கு அழைத்த பா. விஜய்க்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவரது நற்பணி தொடரட்டும், அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.

- Advertisement -

Read more

Local News