Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சூரியை நோக்கி நகரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்… கருடன் செய்த சம்பவம் அப்படி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மதுரையில் ராஜாக்கூர் என்கின்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் சேங்கையரசி தம்பதிக்கு ஆறுவது மகனாக பிறந்தார் சூரி. அந்த ஊரில் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சூரியின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைத்த வேலைகளை செய்து வந்த அவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது.ஆனால், குடும்ப வறுமை காரணமாக அந்த ஆசையை மூட்டை கட்டிவிட்டு, அதே ஊரிலேயே போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் கட்டுவது, பெயிண்ட் அடிப்பது போன்ற வேலையை செய்துவந்தார்.

இதையடுத்து, சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்த சூரிக்கு வேலை எதுவும் கிடைக்காததால், திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அங்கு 7 வருஷம் வேலை செய்தேன். அப்போது நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னை வந்தேன் எப்படியாவது மாசத்திற்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தால் போதும் என்று நினைத்து தான் சென்னை வந்தேன், சென்னை வந்து ஒருவேளை சாப்பாட்டுக்கு டீக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போது கார், பங்களா என்று சந்தோஷமா இருப்பதை விட நான் கஷ்டப்பட்ட காலம் தான் அதிகம் என்று அண்மையில் சூரி கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இவர் ஹீரோவான நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்துள்து. நகைச்சுவை நடிகராக இருந்தவர், ஹீரோவாக நடிக்கிறாரே இதெல்லாம் அவருக்கு செட் ஆகுமா என்ற பலரது சந்தேகங்களையும் தனது நடிப்பின் மூலம் விடுதலை படத்தில் தகர்த்தெறிந்தார் சூரி. அந்த படம் மட்டுமில்லாமல், தற்போது வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கருடன் படத்திலும், தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

கருடன் படத்தில் பெயர் எடுத்த சூரி, அடுத்ததாக, கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், கொட்டுக்காளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மலையாள திரைப்படமான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆனா பெல் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், நடிகர்ல சூரிக்கு மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் சூரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News