Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

இளையராஜா இசைஞானி என்று தெரியும்… அந்த இசைஞானி பட்டத்தை யார் கொடுத்தது தெரியுமா? வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த இளையராஜா பல ஆயிரம் பாடல்களை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். இசை தேவன் என்றும் இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக இசை ரசிகர்கள் கொண்டாடும் இசை கடவுளாக வாழ்ந்து வருகிறார் இளையராஜா.

அவரது 81வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இளையராஜாவுக்கு கருணாநிதி மீது அளவுகடந்த மரியாதை உள்ளது அதேபோல இளையராஜா மீது கருணாநிதிக்கும் அளவற்ற பாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் பிறந்தநாள் ஜூன் இரண்டாம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது உண்மையான பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி தான் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கான காரணமாகவும் கருணாநிதிதான் உள்ளார். கலைஞரின் பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதே நாளில் நாம் எப்படி பிறந்தநாளை கொண்டாடுவது என்கிற எண்ணத்தில் தனது பிறந்தநள் கொண்டாட்டத்தையே மாற்றிக் கொண்டார் இளையராஜா.

ஞான தேசிகன் இசையமைப்பாளர் ஆனதும் இளையராஜாவாக ஆனார். அவருக்கு இசைஞானி பட்டத்தை கருணாநிதி வழங்கினார். காரைக்காலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இளையராஜாவுக்கு ‘இசைஞானி’ என்னும் பட்டத்தை வழங்கும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இசையில் இளையராஜாவுக்கு உள்ள ஞானம் போல இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அளவற்ற பேரறிவு இருக்குமா என்பது சந்தேகம் தான். இசைஞானி என்கிற பட்டத்துக்கு பொருத்தமானவர் இளையராஜா என்பதை அறிந்து கொண்ட கருணாநிதி அந்தப் பட்டத்தை வழங்கினார்.

- Advertisement -

Read more

Local News