சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் அந்த வீடியோவில் ரவீணாவை சுற்றி வளைத்த உள்ளூர்வாசிகள் போலீசுக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவர், “நீங்கள் சீக்கிரம் ஜெயிலுக்குப் போகப் போறீங்க, என் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது” என்கிறார். கேமராவை கவனித்த ரவீணா, பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர், முகமது என்ற நபர் தனது தாய், சகோதரி மற்றும் மருமகள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காட்டுகிறார். இது குறித்து ரவீணா டாண்டன் இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
ரவீணாவின் கார் இடிக்கவே இல்லை என்றும் ரவீணாவிடம் பணம் பிடுங்கவே சிலர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் ரவீணா டாண்டனின் கார் வேகமாக வந்தது போலவே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக விரைவில் ரவீணா டாண்டன் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
49 வயதாகும் ரவீணா டாண்டன் தமிழில் சாது மற்றும் ஆளவந்தான் படங்களில் நடித்துள்ளார். கேஜிஎஃப் 2 படத்தில் இந்தியாவின் பிரதமர் கதாபாத்திரத்தில் இவர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் பாட்னா சுகிலா படம் வெளியானது. வெல்கம் டு ஜங்கிள் மற்றும் குத்சாதி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து வருகிறார்.