இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி, தனது இசை பயணத்தை ‘மைடியர் குட்டிசாத்தான்’ படத்தின் மூலம் தொடங்கினார். ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், மித்ரு மை பிரண்ட், அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால், கடந்த ஜனவரி 25ம் தேதி, 47 வயதில் அவர் மறைந்தார்.

இந்நிலையில், அவர் பாடிய கடைசி பாடல் ‘ஆர்யமாலா’ படத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, ‘அத்திப்பூவ போல’ என்ற பாடலை பாடியிருந்தார். படக்குழுவினர் அந்த பாடலை அவர் பாடும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.
செல்வநம்பி இசையமைத்து, ஆதிரை எழுதிய இந்த பாடலை, எஸ்.பி.ஆர் சினிமாவின் சார்பில் சுதாரா ஜேஸ்வரி தயாரித்துள்ளார். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்த, ஜேம்ஸ்யுவன் இயக்கிய இந்த படத்தில், மனிஷா ஜித்துடன் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.