தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களைக் இயக்கியவர் ஓபிலி என்.கிருஷ்ணா.இவரின் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்தாண்டு ‘பத்து தல’ என்கிற படம் வெளியானது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களுக்கு பிறகு பத்து தல ரிலீஸாகியது. ஆனால் அதே சமயம் வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளைமேக்ஸ் சீனில் சிம்பு, பத்து தல லுக்கில் என்ட்ரி கொடுத்திருப்பார். அப்போதே படத்தின் மீதான் ஆர்வம் அதிகரித்தது. பத்து தல திரைப்படம் இது கன்னட ரீமேக் என்பது அனைவரும் அறிந்தது. கன்னடத்தில் சிம்பு நடித்த ரோலில் சிவ ராஜ்குமார் நடித்து இருந்தார். கன்னடத்தில் இந்த திரைப்படத்திற்கு மஃப்டி என பெயர் வைக்கப்பட்டிருந்தது.

கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இயக்குனர் ஓபிலி என்.கிருஷ்ணாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். மற்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது ஒரு காதல் கதைக்களத்தில் உருவாகவுள்ள படம் என கூறப்படுகிறது.